நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? | மே 29ல் ஓடிடி.,யில் வெளியாகும் ‛லீடர்' |

விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் காசிக்கு புனித பயணம் சென்றிருந்தார் விஷால்.
அங்கு தனது அனுபவத்தை பகிர்ந்த விஷால் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியை பாராட்டி இருந்தார். “அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்திருக்கும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக சல்யூட்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை ரீ-டுவிட் செய்துள்ள மோடி, “உங்களுக்கு காசியில் நல்லதொரு அனுபவம் கிடைத்தற்காக நன்றி” என்று தெரிவித்துள்ளார்.




