ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

தமிழ் சினிமாவிலிருந்து மற்றுமொருவராக நடிகர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரை இதுவரையில் நடிகர் சங்க நிர்வாகிகள், இயக்குனர் விக்ரமன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமே சந்தித்துப் பேசியுள்ளனர்.
நடிகர் சங்க நிர்வாகிகள் கூட வாழ்த்து மட்டும்தான் தெரிவித்துவிட்டு வந்தனர். அவர்கள் தரப்பில் கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. ஆனால், கமல்ஹாசன் சந்தித்த போது 6 கோரிக்கைகள் முன் வைத்தார். அவற்றில் 8 வார இடைவெளிக்குப் பிறகே ஓடிடி ரிலீஸ் என்பது மிக முக்கியமானது. அது பற்றி தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் ஏற்கனவே விவாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நேற்று எக்ஸ் தளம் மூலம் நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார். அதில் ஆன்லைன் முன்பதிவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், சிறிய படங்களுக்கான மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கும்.
கமல்ஹாசன், விஷால் இப்படி தனித்தனியே கோரிக்கைகளை வைத்திருப்பது திரையுலக சங்கங்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கங்கள், வினியோக சங்கங்கள், தியேட்டர் சங்கங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பற்றித்தான் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
இருந்தாலும் சங்கங்கள் சார்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே, இப்படி தனித்தனியே வைப்பது சரியல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.