
மேடையில் கெட்ட வார்த்தை பேசி பின் சமாளித்த ராஷ்மிகா
ஹோமி அடஜானியா இயக்கத்தில், ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் "காக்டெயில் 2". இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
அப்போது மேடையில் தன்னுடன் நின்றிருந்த சக நடிகையான கிர்த்தி சனோன் பற்றி ராஷ்மிகா பேசுகையில், “நீங்கள் "ஹாட்" ஆக இருக்கிறீர்கள். அதை இந்த உலகம் அறியும். மேலும், நீங்கள் ……………… ஹாட்" என இடையில் ஒரு கெட்ட வார்த்தையைப் போட்டுப் பேசினார்.
உடனடியாக தனது தவறை உணர்ந்த ராஷ்மிகா, "அந்த வார்த்தையை சென்சார்" செய்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவர் அப்படிப் பேசியதும் மேடையில் நின்றிருந்த கிர்த்தி சனோன், ஷாகித் கபூர் மிகவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பின்னர் "சாரி…சாரி" என்றார் ராஷ்மிகா.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களும் ராஷ்மிகாவின் "அந்த" வார்த்தையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!