ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் அறிமுகமானார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய அந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தை அடுத்து தற்போது 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' என்ற படத்தில் நடிக்கப் போகிறார் ருத்ரா.
காதல் கதையில் உருவாகும் இந்த படத்தை விக்கி பாஸ்கர் இயக்குகிறார். இப்படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். தனது தம்பி ருத்ரா நடிக்கும் இந்த இரண்டாவது படத்தையும் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, இந்த படம் நிஜ வாழ்க்கைக்கும் திரைக்கும் இடையில் ஊசல் ஆடுவதை பற்றிய கதை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.