லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் மார்ச் 25ம் தேதி வெளிவந்தது. எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படம் முதல் நாளிலிருநதே நல்ல வசூலைப் பெற்றது. முதல் வார இறுதி முடிவில் உலக அளவில் இப்படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஐந்து மொழிகளிலும் படத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருப்பதாக அந்தந்த திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரானோ அச்சம் முழுமையாக விலகாத சூழ்நிலையிலும் இந்தப் படத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மூன்று 500 கோடி படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி. இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 1' படத்தின் மொத்த வசூல் 700 கோடியாகவும், 'பாகுபலி 2' படத்தின் வசூல் 1800 கோடியாகவும் இருந்தது. இப்போது 'ஆர்ஆர்ஆர்' 500 கோடி வசூலை மூன்றே நாட்களில் கடந்துள்ள நிலையில் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.