லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று(பிப்., 27) நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுபோடும் உறுப்பினர்களாக 1900பேர் உள்ளனர். இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சேர்த்து 1521 ஓட்டுகள் பதிவாகின.
செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
மொத்தம் பதிவான ஓட்டுகள் - 1521. செல்வமணி பெற்ற ஓட்டுகள் -955. பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள்-566. இதன்மூலம் 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர் கே செல்வமணி வெற்றி பெற்று, இயக்குனர் சங்க தலைவராக மீண்டும் தேர்வானார்.