லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ரேணிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கும் படம் ஐஸ்வர்யா முருகன். மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரிக்கிறார்கள். அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை, ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் , நாகேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ஜெனா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் பற்றி பன்னீர் செல்வம் கூறியதாவது: தமிழ் சினிமா காதலையும் காதலர்களின் வலியையும், பிரிவையும், இன்பத்தையும் பல படங்களில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு காதலர்களின் குடும்பங்களின் என்னென்ன துயரங்களை உண்டாக்கும். காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளையும்., கிளைகளையும் தாண்டி வேரோடும்.. ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது. காதலின் இந்த பக்கத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்த வருகிறது. என்றார்.