டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'.
இப்படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவு ஒரு வாரம் முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது. சென்னையில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கான முன்பதிவை ரோகிணி, ஜிகே சினிமாஸ் ஆகிய தியேட்டர்கள் ஆரம்பித்தன. அந்த காட்சிகளுக்கான முன்பதிவு மொத்தமாக முடிந்துவிட்டது. மற்ற தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அடுத்து 8 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிம்பு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களுக்குக் கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. இப்போது 'மாநாடு' படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் முன்பதிவுக்கு ஆதரவு இருக்கிறது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.




