துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சமூக வலைத்தளங்களால் பல நல்ல விஷயங்கள், மாற்றங்கள் நடந்து கொண்டிருக்க பணத்திற்காக சிலர் அதை தவறான விஷயங்களுக்கு விளம்பரப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.
அதிக அளவிற்கு பாலோயர்களை வைத்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், பிரபலங்களிடம் தங்களது வியாபாரத்தைப் பற்றி பிரபலப்படுத்திப் பதிவிட பல நிறுவனங்கள் பல லட்சங்களைத் தருகிறார்கள். பாலோயர்களுக்கு ஏற்றபடி அதற்கான பணத்தைத் தருகிறார்கள்.
சமீபத்தில் நடிகை ரெஜினா கசான்ட்ரா, 'விஸ்கி' விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இப்போது நடிகை காஜல் அகர்வால் அதே போன்று 'விஸ்கி' விளம்பரப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய கணவருடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாடினார். அன்றைய தினத்தில்தான் இந்த 'விஸ்கி' விளம்பரத்திற்கான புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. விளம்பரத்திலும் கணவன், மனைவி இருவரும் இடம் பெற்றுள்ளார்கள்.
தீபாவளி பார்ட்டிக்கு விஸ்கி பொருத்தமானது என காஜல் குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் விளம்பரம் மீது அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.