ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். டில்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விருது வழங்கி கவுரவித்தார்.
‛‛இந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர், சகோதரர் சத்யநாராயணன், நண்பர் ராஜ் பகதூர் மற்றும் திரைத்துரையை சார்ந்த அனைத்து கலைஞர்கள், ரசிகர்களுக்கும், தன்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதை பெற்ற பிறகு டில்லியில் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
விருதுகளுடன் மாமனார் - மருமகன்
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். ஒரேநேரத்தில் ஒரே விழாவில் மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷூம் விருது பெற்றனர். இவர்கள் இருவரும் விருதுகளுடன் போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.