'திருமணம்' படத்துக்கு விருது இல்லை: இயக்குனர் சேரன் ஆதங்க பதிவு | இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகும் உயிர் உள்ளவரை உஷா | சந்தானத்தின் புதிய படம் பற்றிய தகவல் | மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி' கூட்டணி | மமிதா பைஜூக்கு போட்டியா அனஸ்வரா ராஜன் | நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா | அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஜமவுலியின் முந்தைய பாகுபலி படத்தை விட இந்த படம் வெளிநாட்டு ரசிகர்களாலும் ஹாலிவுட் பிரபலங்களாலும் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல பல சர்வதேச விருதுகளையும் வென்று ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இந்த படத்திற்கு நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன
இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டாலும் படத்தின் இன்னொரு நாயகனான ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து எங்குமே ராம்சரணே முன்னிலைப்படுத்தப்பட்டதால் இந்த படத்தின் வெற்றியை அவர் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டதாக தெலுங்கு ரசிகர்கள் குறிப்பாக ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் இந்த சர்ச்சை விருது வழங்கும் குழுவினரின் கவனத்திற்கும் சென்றது. இதை தொடர்ந்து அவர்கள் விளக்கம் அளிக்கும் விதமாக தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “ஜூனியர் என்டிஆருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாங்கள் அழைப்பு அனுப்பியுள்ளோம். அவருக்காக விருது ஒன்றும் வழங்கப்பட இருந்தது. ஆனால் அவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருவதாலும் சமீபத்தில் அவரது சகோதரர் மரணம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகவும் அவர் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவரது தரப்பிலிருந்து எங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. விரைவில் அவர் இந்த விருதை எங்களிடம் நேரில் பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறி ரசிகர்களின் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.