தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக வசன உச்சரிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்கள் மனதில் எளிதாக பதிந்தார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கேரள உறவினராக நடித்திருந்தார் கோட்டயம் பிரதீப். அந்தப் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் அவரது மவுசு இன்னும் கூடியது. அதைத்தொடர்ந்து மீண்டும் தமிழில் தெறி படத்தில் கேரளாவில் விஜய் நடத்தும் பேக்கரியில் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நடித்துள்ள மோகன்லாலின் ஆராட்டு படம் நாளை வெளியாக உள்ளது.