ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், நடிகர் ஹிரித்திக் ரோஷனும் ஒரு காலத்தில் நெருங்கி பழகியதுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கங்கனாவே கூறியுள்ளார். ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதற்கிடையே தன்னை பின்தொடரும் மர்மநபர் யாரோ, தனது இ-மெயிலில் இருந்து யாரோ ஆள்மாறாட்டம் செய்து கங்கனாவுடன் தான் தொடர்பில் இருந்தது போல செய்தி அனுப்பியதாக 2016ல் போலீஸில் புகார் அளித்தார் ஹிரித்திக் ரோஷன்..
ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியதால், இந்த வழக்கு தற்போது மும்பை போலீஸில் இருந்து க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம், மும்பை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள க்ரைம் பிரஞ்ச் அலுவலக பிரிவுக்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன், இந்த புகார் குறித்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.