Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » வரவிருக்கும் படங்கள் »

  • நடிகர் : தம்பி ராமையா
  • நடிகை : ..
  • இயக்குனர் :ஆஷிக்
Share  
Bookmark and Share

தினமலர் முன்னோட்டம் » உ

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் "உ". இதில் தம்பி ராமையா ஹீரோவாக நடிக்கிறார். நல்ல வேளை ஹீரோயின் கிடையாது. கதைப்படி அவருக்கு ஒரு பெரிய வேலை வருகிறது. அந்த வேலையை செய்து முடித்தால் அவர் கோடீஸ்வரனாகலாம். ஆனால் அதை அவர் ஒருவரால் மட்டுமே செய்ய முடியாது. அதனால் நான்கைந்து இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அந்த வேலையைச் செய்கிறார். கோடிகள் கொட்டும் வேலை என்பதால் இளைஞர்கள் தம்பி ராமையாவை ஏமாற்றிவிட்டு அந்தப் பணத்தை இவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள். யார் வெற்றி பெற்றார்கள் என்பதுடன் முடியும் கதை. ஆஷிக் இயக்குகிறார், அபிஜித் ராமசாமி இசை அமைக்கிறார். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்குமார் எடிட் செய்கிறார். இவர்கள் அனைவரும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு படத்தை இயக்குகிறார்கள்.
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in