நிலா படைப்புலகம் சார்பில் டாக்டர் பி.ஆனந்தன் தயாரிக்கும் படம் பரிதி. முக்கோண காதல் கதையாக பரிதி படம் உருவாகிறது. பாக்யராஜ், வசந்த் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த கோ.ஆனந்தசிவா இப்படத்தை இயக்குகிறார். ஆனந்த தாண்டவம், மந்திரப்புன்னகை, பயணம் போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த ரிஷி, இப்படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுக்கிறார். ரிஷிக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த கரீனாஷா என்பவர் அறிமுகமாகிறார்.
எம்.ஆர். தீபக் ஒளிப்பதிவு செய்ய, இளையன்பு ஐ.ஏ.எஸ்., தமிழ் முருகன் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு இலக்கியன் சாரு இசையமைக்கிறார். டாக்டர் பி.ஆனந்தன் தயாரிக்கிறார். பரிதி படத்தின் சூட்டிங் முழுக்க முழுக்க தஞ்சையில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.