‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வேந்தர் டி.வியில் நடந்து வரும் பிரமாண்ட பாடல் போட்டி நிகழ்ச்சி வி&வாய்ஸ். அடுத்த தலைமுறைக்கான குரல் தேடல் என்ற கேப்சனுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் குரல் தேர்வு நடந்தது. 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடந்த இந்த குரல் தேர்வு மூலம் 32 சிறந்த பாடகர், பாடகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பேருடன் போட்டி சுற்று நடத்தப் படுகிறது. இதிலிருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு டாப் 20 சுற்று துவங்கும். நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதி போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. போட்டியின் நடுவர்களாக பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, பின்னணி பாடகர்கள் பிரசன்னா, நரேஷ் அய்யர் பணியாற்றுகிறார்கள். வரும் எபிசோட்களில் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலக்க இருக்கிறார்.