தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் |
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. என்னதான் அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தாலும் கூட இன்னும் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு நண்பனாக நடிக்கும் பட்டியலில் தற்போது யோகி பாபு தான் முன்னணியில் இருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய்யுடன் ஐந்தாவது முறையாக இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார் யோகிபாபு. இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது, இதனை அடுத்து அங்கிருந்து கிளம்பி நேற்று முதல் சென்னையில் நடைபெறும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் யோகிபாபு, இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.