‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஈகோ. அமெரிக்க என்ஜினீயர் வேலு ஹீரோ, புதுமுகம் அனஸ்வரா ஹீரோயின். கனா காணும் காலங்கள் புகழ் பாலசரவணன் காமெடியன். சிங்கப்பூர் ரிட்டன் என்ஆர்ஜ பார்ட்டி பெரியசாமி ரவிச்சந்திரன் தயாரிப்பாளர்.
இந்தப் படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் வரிவிலக்கு கிடைக்காது என்ற செய்தி பரவ அவசர அவசரமாக அதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சக்திவேல் "நாயகனின் பெயர் ஈஸ்வர், நாயகியின் பெயர் கோமதி. இரண்டு எழுத்துக்களின் முதல் பெயரை இணைத்து ஈகோ என்று வைத்திருக்கிறோம். படத்தில் இருவருக்கு அடிக்கடி ஈகோ வந்து அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை என்பதால் அதற்கு பொருத்தமாக இந்த பெயரை வைத்திருக்கிறோம்.
மற்றபடி இது ரொமாண்டிக் காதல் படம். நாயகன் நாயகியை காதலித்த பிறகு அந்த காதலுக்கு நாயகியின் வீட்டில் ஒப்புதல் பெற வேண்டும். நாயகியின் வீட்டில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான கேரக்டர். நாயகியின் குடும்பத்தை லூசு குடும்பம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களை சமாளித்து தன் காதலுக்கு நாயகன் எப்படி பர்மிஷன் வாங்குகிறார் என்பதுதான் கதை. எல்லோரும் பார்க்கும் தரமான படம் அதனால் யூ சான்றிதழும் கிடைக்கும், வரி விலக்கும் கிடைக்கும். என்றார்.
அதுசரி "ஃபிரம் த டைரக்டர் ஆப் கந்தகோட்டை"ன்னு டைட்டில் போடுறீங்களே... அது அத்தனை ஹிட் படமா என்ன?