Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடனஇயக்குனர் ஆனார் அபிநயஸ்ரீ

10 செப், 2012 - 14:11 IST
எழுத்தின் அளவு:

மாஜி கவர்ச்சி குத்தாட்ட நடிகை அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ. தன் மகள் தன்னைபோல கவர்ச்சி நடிகையாகிவிடக்கூடாது. நல்ல ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்று நினைத்தார் அனுராதா. அதற்காக முறைப்படி நடனம், நடிப்பு கற்றுக் கொடுத்து அபியை சினிமாவுக்கு கொண்டு வந்தார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. அம்மாவை போலவே மகளும் கவர்ச்சி நடனக்காரியாகத்தான் வந்தார். பிரண்ட்ஸ் உள்ளிட்ட ஒரு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். தெலுங்கில் காமெடி வேடங்களில் நடித்தார். அம்மா அனுராதாவாவது ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அபிக்கு அதுவும் அமையவில்லை.

இப்போது குத்தாட்ட சான்சும் குறைந்து போனது. அதனால் எடிட்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படிக்கப்போகிறேன் என்று புத்தகத்தை தூக்கிக் கொண்டு கிளம்பினார். படித்தும் முடித்தார். சொந்தமாக ரிக்கார்டிங் ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்பது அபியின் இப்போதைய பிளான். அதற்கு பணம் வேண்டுமே. அதற்காக இப்போது நடன இயக்குராகிவிட்டார். தமிழ், தெலுங்கில் 4 படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறார். மகளுக்காக அம்மா அனுராதா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

2013ம் ஆண்டில் மகளுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவையும், அப்படியே ஒரு நல்ல மாப்பிள்ளையையும் கட்டி வைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார் அம்மா அனுராதா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ரசிகன் - Chennai,இந்தியா
12 செப், 2012 - 10:57 Report Abuse
 ரசிகன் அபிநய ஸ்ரீ ஒரு நல்ல நடன கலைஞர். சிறந்த அசைவுகளும், முக பாவங்களும் வெளிக்காட்ட கூடியவர். நான் ஒரு முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன். நல்ல அழகியும் கூட. விரைவில் அவரது கவர்ச்சியையும் தாண்டி நல்ல நடனத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
Rate this:
தொழில் கோதண்டம் - polapathor nagar,இந்தியா
11 செப், 2012 - 14:33 Report Abuse
 தொழில் கோதண்டம் நல்ல தொழில்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in