சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சிக்கு விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை பரிசாக அளித்துள்ளார். நடிகை குஷ்புவும், டைரக்டர் சுந்தர்சியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட குஷ்பு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்று வருகிறார். டைரக்டர் சுந்தர்சி டைரக்ஷனுடன், ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு பிடித்த காரை குஷ்பு பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு எல்லாமே சுந்தர் சி.தான். என் காதல் வெளிப்பாடாகவே இந்த காரை வாங்கி பரிசாக அளித்துள்ளேன். சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இவ்வருடத்தின் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. நான் இப்படத்தின் தயாரிப்பாளர் இதில் பணியாற்றியதற்காக சுந்தர்சிக்கு ஊதியம் அளிக்கவில்லை. அதற்கு பதில் ஆடி கார் அளித்துள்ளேன். சுந்தர்.சிக்கு கார்கள் மீது அதிக பிரியம். அவருக்கு ஏதாவது பரிசு பொருளை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது எனவேதான் கார் பரிசளித்தேன். சுந்தர்.சி இன்னும் வெற்றிகரமான படங்களை கொடுப்பதற்கு இந்த கார் பரிசு ஊக்கப்படுத்துவதாக இருக்கும், என்றார்.