ப்ரியா ஆனந்த் "குண்டு பார்முலா | "மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |
தனக்கென்ன யதார்த்த பாணியில் கதை சொல்லும் வல்லவர் டைரக்டர் பாண்டிராஜ். அதற்கு அவர் இயக்கிய பசங்க, வம்சம், மெரினா படங்களே சாட்சி. மெரினா படத்திற்கு பிறகு பாண்டிராஜ் அடுத்து இயக்க இருக்கும் படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையாக உருவாக இருக்கிறது. படத்தின் நாயகர்களாக விமலும், சிவ கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல்படம் இது. படத்தின் நாயகியாக இப்போதைக்கு பிந்து மாதவி மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியாக கும்கி லட்சுமியை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் மற்ற நட்சத்தரங்கள் மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு நடந்து வருகிறது. காமெடி அதகளத்தோடு உருவாகவுள்ள இப்படம் அடுத்த மாதம் திருச்சியில் ஆரம்பமாக உள்ளது.