புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள இப்படம், பொங்கலுக்கு வெளியாகிறது. முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான்.
மதுரை கதைக்களத்தை பின்னணியாக கொண்டு இப்படத்தில், அஜித், தூக்கு துரையாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அடிச்சு தூக்கு பாடல் வெளியாகி உள்ளது.
விவேகா எழுதியுள்ள இப்பாடலை இமான், ஆதித்யா, நாராயண் இணைந்து பாடியிருக்கிறார்கள். ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதத்தில் இப்பாடல் அமைந்திருக்கிறது.
Here's first single of #Viswasam #AdchiThooku @directorsiva @SureshChandraa @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @AandPgroups @LahariMusic @DoneChannel1https://t.co/wTvTBWXVgb pic.twitter.com/iWJafdJRJl
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 10, 2018