‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டாக்டரான நடிகர் சீனிவாசன், லத்திகா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தனக்கு தானே பவர்ஸ்டார் பட்டம் என சூட்டிக் கொண்டு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார். பண மோசடி வழக்குகளால் சிறைவாசமும் சென்று வந்தார்.
இந்நிலையில் சீனிவாசன் காணாமல் போய்விட்டதாகவும், அவர் கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி ஜூலி போலீசில் புகார் கொடுத்துள்ளார். கடன் பிரச்னையால் சிக்கி தவிக்கும் சீனிவாசனை, யாரோ கடத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்னை தொடர்பாக ஊட்டியில் அவர் இருப்பதாகவும், பிரச்னை தீர்ந்தவுடன் சென்னையில் திரும்புவதாகவும் போலீசில் சீனிவாசன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.