‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து சிரஞ்சீவியுடன் சைரா , அஜீத்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் ஜித்து ஜில்லாடி படங்கள் நடிக்கும் நயன்தாரா, ஐரா என்ற படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் இந்த படங்களுக்கெல்லாம் முன்பாக உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 படங்களை இயக்கிய சக்ரி டோல்ட்டி இயக்கத்தில் கொலையுதிர்காலம் என்ற படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. அந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு அஜீத்துடன் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் வெளியானதும், கொலை யுதிர்காலம் படமும் வெளியாகிறதாம்.