மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சசி குமார் ஆகியோர் நடித்து வரும் இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வருகிறது.
பேட்டயில் ரஜினி கல்லூரி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் ரஜினியின் தோற்றம் நடுத்தர வயதை பிரதிபலித்தது.
இந்நிலையில் பேட்ட படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினி மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். மேலும் வெள்ளை நிற வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து இருப்பதுடன் மீசையையும் வித்தியாசமாக சிங்கம் சூர்யா மற்றும் மொம்பன் கார்த்தி ஸ்டைலில் வைத்திருக்கிறார்.
கபாலி, காலா படங்களில் வயதான தோற்றங்களில் நடித்து வந்த ரஜினி, பேட்ட படத்தின் மூலம் மீண்டும் இளமையான தோற்றத்திற்கு திரும்பியிருப்பதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். அதோடு பேட்ட செகண்ட் லுக் போஸ்டரும் டிரண்ட்டாகி உள்ளது.