‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தன்னுடைய உடலமைப்பை குண்டாக மாற்றியவர் அனுஷ்கா. ஆனால், படத்தில் நடித்து முடித்த பின்னும் அவரால் உடலமைப்பை பழையபடி ஸ்லிம்மாகக் கொண்டுவர முடியவில்லை. 'பாகுபலி 2' படத்தில் நடிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார். அவரை படத்தில் இளமையாகக் காட்டுவதற்காக சிலபல கோடிகளை செலவு செய்து கிராபிக்ஸ் மூலம் ஸ்லிம்மாகக் காட்டினார்கள்.
அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லை. அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்க வைக்க பலர் தயங்குகிறார்கள் என்றும் தகவல் வெளியானது. யோகாவில் ஆசிரியராக இருந்தாலும் அனுஷ்காவால் பழைய நிலையைக் கொண்டு வரமுடியவில்லை.
இதனால், ஆஸ்திரியாவில் உள்ள புகழ் பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு அனுஷ்கா சென்றுள்ளதாகத் தெரிகிறது. அங்கு உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமைத் தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளாராம். 15 நாள் சிகிச்சை பெற நாள் ஒன்றிற்கு 1 லட்ச ரூபாய் கட்டணமாம்.
ஏற்கெனவே, தெலுங்குத் திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளதாகவும், அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார் என்றும் சொல்கிறார்கள். இந்த செய்தி வெளியில் கசிந்தது பற்றி அனுஷ்கா வருத்தமடைந்துவிட்டாராம்.