ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தடக் ஹிந்திப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார். ஜான்வி கபூர், ஹிந்தியில் அறிமுகமாவதற்கு முன்பே, தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில்தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, அவர் ஹிந்தியில்தான் அறிமுகமானார்.
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அடுத்து தெலுங்கில் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசி வருகிறார்களாம். அவர் அதற்கு நடிக்க சம்மதிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான்வி ஹிந்தியில் மட்டும்தான் நடிக்க முடிவெடுத்துள்ளாரா அல்லது தென்னிந்தியப் படங்களிலும் நடிக்க விருப்பமுடன் இருக்கிறாரா என்பது இந்தப் படத்திற்காக அவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பொறுத்து உள்ளது.