ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடிப்புடன் சேர்த்து அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது படங்களில் பாடியும் வருகிறார் மோகன்லால். இதுதவிர ஒன்றிரண்டு பக்திப்பாடலும் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான அவரது நீராளி படத்திலும் ஸ்டீபன் தேவஸி என்பவர் இசையமைபில் ஒரு பாடலை பாடியிருந்தார் மோகன்லால்.
தற்போது லேட்டஸ்ட்டாக தான் நடித்துவரும் ஒடியன் என்கிற படத்திலும் ஒரு நாட்டுப்புற பாடலை பாடியுள்ளார் மோகன்லால். இந்தப்படத்தின் பாடல்களுக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க, பின்னணி இசையை விக்ரம் வேத புகழ் சாம் சி.எஸ் கவனிக்கிறார். விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.