ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில மாதங்களாகவே டோலிவுட், கோலிவுட் பிரபலங்களின் மீது ஆபாச புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது தனது இணைய பக்கத்தில் கிகி சேலஞ்ச் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபலங்கள் காரில் இருந்து திடீரென இறங்கி நடன மாடுவதை வீடியோவாக வெளியிட்டு வரும் இந்த கிகி சேலஞ்ச் உலகமெங்கிலும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை ரெஜினா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த ஆபத்தான விளையாட்டால் சில விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் இதை பிரபலங்கள் கைவிடவேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனபோதும் கிகி சேலஞ்ச் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், தற்போது சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டியும், கவர்ச்சிகரமாக உடையணிந்தபடி நடனமாடி கிகி சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளார்.