ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதனை மதி ராகவ் இயக்குகிறார். விஜய் செல்லா, சாஷிதேவி ரெட்டி தயாரிக்கிறார்கள். இதில் ஒய்.எஸ்.ஆர்.,-ஆக மம்முட்டி நடிக்கிறார். படத்தின் முதல் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. நாற்காலியில் இருந்து கம்பீரமாக எழுந்து செல்லும் மம்முட்டி வீட்டு வாசலில் நின்று பொதுமக்களின் ஆரவாரங்களுக்கு இடையே அவர்களை பார்த்து கையசைப்பது மாதிரியான காட்சி இடம் பெற்றுள்ளது.
மம்முட்டியின் நடையும், முகபாவமும், தோற்றமும் அப்படியே ராஜசேகர ரெட்டியை நினைவுபடுத்துவதாக ஆந்திர ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மம்முட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறன்றன. மம்முட்டி, அப்பேத்காராக நடித்து தேசிய விருது பெற்றது போன்று இதற்கும் தேசிய விருது கிடைக்கும் என்று இப்போதே பாராட்டத் தொடங்கிவிட்டார்கள்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றில் அவர் நடத்திய 1475 கிலோ மீட்டர் பாதயாத்திரை மிக முக்கியமானதாகும். அதை நோக்கியே படத்தின் கதை நகர்வதால் படத்திற்கு யாத்ரா என்று பெயரிட்டிருக்கிறார்கள். 2009ம் ஆண்டு அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது எழுந்த சில கேள்விகளுக்கும் படத்தில் பதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.