‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தற்போது ஹிந்தியில் தாதக் தாதக் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்திய சினிமாவில் அம்மா ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப வேண்டும் என்கிற கோணத்தில் தனது எதிர்கால சினிமா பயணத்தை தொடங்கியிருக்கிறார் ஜான்வி கபூர்.
இந்நிலையில் ஸ்ரீதேவி கணவரின் தம்பியான அனில்கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்றைய தினம் மெஹந்தி விழா நடை பெற்றது. இதில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் இருவரும் அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடள் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சியில், அம்மா ஸ்ரீதேவி நடித்த படங்களின் பாடல்களுக்கு ஜான்வி கபூர் நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாவின் பாடல்களுக்கு தன்னால் நடனமாட இயலாது என்று கூறி விட்டாராம் அவர். அதனால் அந்த நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விட்டார்கள்.