‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, விஜய்யின் மெர்சல் என அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். இன்னும் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
தற்போது, வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ள 'பிராணா' என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஒரு எழுத்தாளர் பற்றிய ஹாரர் கதை. படத்தில் ஹைலைட், நித்யா மேனன் பாத்திரம் மட்டுமே .உள்ளது. வேறு நடிகர்களே இல்லை..
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடக்கின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளது.
'ஒகே கண்மணி' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பி.சி.ஸ்ரீராம், நித்யா மேனன் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.