மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் மகாநதி. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் சாவித்ரி வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் கமிட்டானதும், சாவித்ரி வேடத்திற்கு இந்த நடிகையா? என்று ஜமுனா உள்ளிட்ட நடிகைகள் கிண்டல் செய்தனர்.
படம் வெளியான பிறகு என் நடிப்பை பார்த்துவிட்டு சொல்லுங்கள் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார். சாவித்ரி நடித்த படங்களைப்பார்த்து, அவரைப்பற்றிய விசயங்களை கேட்டறிந்து முழு உத்வேகத்தில், ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மேக்கப்போட்டுக் கொண்டு நடித்தார்.
தற்போது படம் ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டது. படத்தின் போஸ்டர்கள், டீஸர் எல்லாம் பார்த்து பலரும் கீர்த்தியை பாராட்டி வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் கீர்த்தி, மகாநதி திரைக்கு வரும்போது தன்னை கிண்டல் செய்தவர்களும் பாராட்டுவார்கள் என்கிறாராம். அந்தளவுக்கு முழு ஈடுபாட்டோடு, வெறித்தனமாக நடித்திருக்கிறாரம் கீர்த்தி சுரேஷ்.