'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
அஜித்தின் விசுவாசம், விஜய்யின் 62வது படம், சூர்யாவின் என்ஜிகே ஆகிய மூன்று படங்களையும் அறிவிக்கும்போதே தீபாவளி ரிலீஸ் என்று சொன்னார்கள். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடந்து வந்ததால் தற்போது அரை கிணற்றை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் செல்வராகவன் மிதமான வேகத்தில் தான் செல்வார். என்பதால் முப்பது சதவிகித ம்தான் முடிவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவே இல்லை. ஜனவரி, பிப்ரவரி என்று சொல்லி வந்தவர்கள் பின்னர் மார்ச் மாதம் படப்பிடிப்பு நடப்பதாக சொன்னார்கள். ஆனால் அந்த நேரம் பார்த்து திரையுலகில் ஸ்டிரைக் வந்து விட்டதால் இன்னும் ஒருநாள்கூட படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் உள்ளது.
ஆக, இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் விசுவாசம் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆனால் விஜய் படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வந்து விடும் என்கிறார்கள். அதேபோல், சூர்யாவின் என்ஜிகே படத்தையும் எப்படியேனும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று முயற்சி செய்கிறாராம் செல்வராகவன். ஆனால் திரையுலக ஸ்டிரைக் இன்னும் நீடித்தால் அதுவும் சந்தேகம் தான் என்கிறார்கள்.