ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமாகி 'மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, உத்தமபுத்திரன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இன்னும் வெளிவராத 'நரகாசூரன்' படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
ஸ்ரோயவுக்கும் அவருடைய ரஷ்ய காதலர் ஆன்ட்ரி கொஸ்சீவ் இருவருக்கும் மார்ச் 18ம் தேதி திருமணம் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், ஒருவாரம் முன்னதாக மார்ச் 12ம் தேதியன்றே ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இருவரது குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணம் ஸ்ரேயாவின் மும்பை வீட்டில் நடந்துள்ளது. திரையுலகத்திலிருந்து ஹிந்தி நடிகரான மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது மனைவி மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த பத்து நாட்களாக டுவிட்டரில் எந்தப் பதிவும் போடாமல் ஸ்ரேயா இருந்துள்ளார். திருமண பிஸியில்தான் அவர் சமூக வலைத்தளம் பக்கம் வரவில்லை என்கிறார்கள். விரைவில் ஸ்ரேயாவே அவரது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.