‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருப்பதி என்ற படத்தில் தனது உடம்பை ஸ்லிம் பண்ணி நடித்தார் அஜீத். அதன்காரணமாக அவரது தோற்றமே மாறியிருந்தது. அதையடுத்து, இந்த ஒல்லியான தோற்றம் வேண்டாம். குண்டான தோற்றம்தான் அஜீத்திற்கு அழகு என்று அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அதனால் மறுபடியும் தனது வழக்கமான தோற்றத்திற்கே மாறி நடித்து வருகிறார் அஜீத்.
இந்த நிலையில், தற்போது அதே வேலையை ஹன்சிகாவும் செய்திருக்கிறார். இவரது குண்டான தோற்றத்தை வைத்து அவரை சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
தற்போது ஹன்சிகா அதர்வா, விக்ரம் பிரபு என இளவட்ட நடிகர்களுடன் நடித்து வருகிறார். அதனால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி தெரியக்கூடாது என்பதற்காக உடல் எடையை குறைத்து ஒல்லிகுச்சி நடிகையாகியிருக்கிறார் ஹன்சிகா.
ஆனால் இப்போது அவரை பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது. அந்த அளவுக்கு ஆளே மாறிப்போயிருக்கிறார் ஹன்சிகா. ஆக, தற்போது ஹன்சிகா நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும் போது ரசிகர்கள் என்ன ரியாக்சனை வெளிப்படுத்தப் போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.