ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அலை, யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தெலுங்கில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ் மற்றும் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன் நாகசைதன்யா ஆகியேர் இணைந்து நடித்த மனம் உள்பட பல தெலுங்கு படங்களை இயக்கியிருக்கும் இவர், தற்போது அகில் நடிப்பில் ஹலோ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோ சார்பில் நாகார்ஜூனா தயாரித்துள்ளார்.
ஹலோ படத்தில் அகிலுடன் கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா கிருஷ்ணன், ஜெகபதிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே பர்ஸ்ட்லுக் வெளியாகி உள்ள நிலையில், டிசம்பர் 10-ந்தேதி ஆடியோ வெளியிடுகிறார்கள். டிசம்பர் 22-ந்தேதி அதாவது கிறிஸ்துமஸ்க்கு படம் வெளியாகிறது.
இந்த படத்தின் ஆடியோவை வைசாக்கில் வெளியிடுகிறார்கள். காரணம், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிக்கும் படங்கள் வைசாக்கில் எப்போதும் நல்ல வசூலை கொடுக்குமாம். அந்த செண்டிமென்ட் காரணமாக, இளைய மகன் அகிலின் ஹலோ படத்தின் ஆடியோவை வைசாக்கில் வெளியிடுகிறாராம் நாகார்ஜூனா.