ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதோடு, இசையமைப்பாளர் ஏ.ஆ.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோரும் அந்த படத்தில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் அந்த படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் திடீரென்று விலகினார். அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் விலகி உள்ளார். இந்த நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக எஸ்.எஸ்.தமன் இசையமைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இந்த செய்தியை தமன் மறுத்துள்ளார். சைரா நரம்ம ரெட்டி படத்தில் இசையமைப்பது பற்றி இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. அப்படியொரு அழைப்பு வந்தால் உடனடியாக அந்த தகவலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.