ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான "திரிஷ்யம்" படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில். அந்தப்படத்தில் இவரது அபாரமான நடிப்பை பார்த்து தான் தமிழிலும் தெலுங்கிலும் அந்தப்படம் ரீமேக்கானபோது அந்த கேரக்டரில் எஸ்தரையே நடிக்க வைத்தார்கள்.. 2001லேயே குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமான எஸ்தர் அனில் சுமார் 20 படங்களில் நடித்துவிட்டார்..
இந்தநிலையில் தற்போது 17 வயதில் அடியெடுத்து வைத்துள்ள எஸ்தர், 65 வயதான சீனியர் இயக்குனரான ஷாஜி என்.காருண் என்பவர் இயக்கிவரும் 'ஊளு' (அவள்) என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். ராய்லட்சுமியும் இஷா தல்வாரும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்களாம்.