மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த படம் வில்லு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. அதேப்போல் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படத்தில், "கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்க வாரியா..." என்ற பாடலில் விஜய்யுடன் குத்தாட்டம் ஆடினார் நயன்தாரா. ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையவில்லை.
இந்த நிலையில், மெர்சலைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக் கிறது. இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த நயன்தாரா, அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.
அறம் படத்திற்கு பிறகு நயன்தாராவின் ஸ்டார் வேல்யூ இன்னும் எகிறி நிற்கும் நிலையில், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் கதை சமூக சிந்தனை உள்ள கதை என்பதால் நயன்தாரா இணைவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தெரிகிறது.