மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரியல் ஹீரோவான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பற்றி 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய்யிடம் கேட்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம். எனவே, இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அந்த வேடத்தில் நடிக்கிறார்.
'சுக்ரன்' படம் மூலம் விஜய் ஆண்டனியை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தான். அதன்பின் முன்னணி இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் உயர்ந்த விஜய் ஆண்டனி, சில வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரனின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். பின்னர் அந்த வீட்டை சொந்தமாகவே வாங்கிவிட்டார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரனும், விஜய் ஆண்டனியும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தில் சமூக அக்கறையுள்ள இளைஞனாக, திரைப்பட நடிகராகவே நடிக்கிறார் விஜய் ஆண்டனி.