‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வேலையில்லா பட்டதாரி-2 படத்தை அடுத்து திருட்டுப்பயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சஷன், சண்டக்கோழி-2 என பல படங்களில் நடிக்கிறார் அமலாபால். இதில் சுசிகணேசன் இயக்கத்தில் அவர் நடித் துள்ள திருட்டுப்பயலே-2 படம் நவம்பர் 30-ந்தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இதில் தெலுங்கு பதிப்பிற்கு டாங்கோடோச்சடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு தெலுங்கில் லவ் பெயிலியர், நாயக், ஜன்டாபாய் கபிராஜு என பல படங்களில் நடித்துள்ள அமலாபால், அதன்பிறகு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. ஆக சில வருட இடைவெளிக்கு ப்பிறகு தமிழ் டப்பிங் படம் மூலம் மீண்டும் தெலுங்கிற்கு செல்கிறார் அமலாபால். அதோடு, தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும அமலாபால், இந்த சூட்டோடு நேரடி தெலுங்கு படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்று சில கதைகளை கேட்டு வருகிறார். திருட்டுப்பயலே-2 திரைக்கு வந்த பிறகு அந்த படம் குறித்த தகவலை வெளியிடப்போகிறாராம் அமலாபால்.