இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ராதிகா சரத்குமாரும், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவும் இணைந்து தயாரித்து வரும் படம் - 'அண்ணாதுரை'. விஜய் ஆண்டனி நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கும் இந்த படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அண்ணாதுரை படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் படத்திற்கு எந்த 'கட்'டும் கொடுக்கவில்லை. அதேசமயம், அண்ணாதுரை படத்திற்கு 'U/A' சான்றிதழ்தான் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாதுரை படத்துக்கு தணிக்கை முடிவடைந்துவிட்டாலும் சான்றிதழ் கைக்கு வர 15 நாட்கள் பிடிக்கும் என்பதால், நவம்பர்-30 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். நவம்பர் 30-ஆம் தேதி 'அண்ணாதுரை'யை ரிலீஸ் செய்யப்படும் அதே நாளில் சசிகுமாரின் 'கொடி வீரன்', 'திருட்டுப் பயலே-2' ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன.
எத்தனை படங்கள் வெளியானாலும் நவம்பர் 30 அன்று அண்ணாதுரை படத்தை வெளியிட்டே தீருவது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் ராதிகா சரத்குமாரும், பாத்திமாவும்.