‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபாலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. அசோக்.ஜி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பு முடிந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிடுவதாக கூறிவந்தவர்கள், இப்போது ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த படம் சம்பந்தப்பட்ட விசயங்கள் எதையும் இதுவரை வெளியிடாமல் இருந்தவர்கள், நவம்பர் 7-ந்தேதி அனுஷ்காவின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் டிரீட்டாக பாக்மதி பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்கள். அதுவும் ஒருநாள் முன்னதாக அதாவது நவம்பர் 6-ந் தேதியான இன்று மாலை 6.55 மணிக்கு பாக்மதி படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுகிறார்கள்.