‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
2.0 படத்தின் இசை வெளியீடு இன்று மாலை துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. அந்த செலவிலேயே சில படங்களைக் கூட எடுத்துவிடலாம் என்று சொல்லுமளவிற்கு இந்தியத் திரையுலகத்தை மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகத்தையும் வியக்க வைக்கும் அளவிற்கு நடத்த உள்ளார்களாம்.
2.0 படத்தின் பிரமோஷனுக்காக பல புதிய விஷயங்களை செய்து வருகிறார்கள். ஏற்கனெவே ஹாலிவுட்டில் மிகப் பிரம்மாண்டமான பலூனை பறக்க விட்டார்கள். நேற்று படத்தின் பேனரைப் பிடித்துக் கொண்டு 10000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் நடத்தினார்கள். இன்று விழா நடக்கும் புர்ஜ் பார்க் கட்டிடத்தின் அருகில் இருக்கும் உலகிலேயே உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் ரஜினியின் 2.0 தோற்றப் புகைப்படம் விளக்குகளால் ஜொலிக்குமாறு செய்யப்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் சில சிறப்பு நிகழ்வுகளில் 'எல்ஈடி' விளக்குகளால் ஜொலிக்குமாறு செய்வது வழக்கம். அது போலவே இன்றைய '2.0' இசை நிகழ்வுக்கும் செய்ய உள்ளார்கள் எனத் தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால் அது பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.