‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'பாகுபலி 2' திரைப்படம் கடந்த அக்டோபர் 8ம் தேதி ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பானது. ஹிந்தியில் சோனி மேக்ஸ் டிவியில் ஒளிபரப்பான 'பாகுபலி 2', இதுவரை டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
'பார்க்' ரேட்டிங்கின்படி இந்தப் படத்திற்கு 2,65,04,000 பதிவுகள் கிடைத்துள்ளன. இதுவரை ஹிந்தி டிவிக்களில் ஒளிபரப்பான படங்களைக் காட்டிலும் ஐந்து மடங்கிற்கும் அதிகமான பதிவுகளை 'பாகுபலி 2' பெற்றுள்ளது.
ஹிந்தி டிவிக்களில் முதல் முறை ஒளிபரப்பப்பட்ட படங்களில் 'டியூப் லைட்' படம் 51,95,000 பதிவுகளையும், 'மெய்ன் ஹு சூர்யா சிங்கம் 2' 50,30,000 பதிவுகளையும், 'சூர்யவன்ஷம்' 44,56,000 பதிவுகளையும், 'சன் ஆப் சத்தியமூர்த்தி' 43,51,000 பதிவுகளையும் பெற்றிருந்தன. 'டியூப் லைட்' படம்தான் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்தது. அந்த சாதனையை ஐந்து மடங்கு வித்தியாசத்தில் 'பாகுபலி 2' முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் சாதனை படைத்திருந்தாலும் தமிழிலும், தெலுங்கிலும் 'பாகுபலி 2' டிவி ஒளிரப்பில் புதிய சாதனை எதையும் படைக்க முடியவில்லை. தெலுங்கில் 'பாகுபலி' முதல் பாக ஒளிபரப்பும், தமிழில் 'பிச்சைக்காரன்' படத்தின் ஒளிபரப்பும்தான் இன்னமும் சாதனையாகத் தொடர்கின்றன.