ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் அனு இம்மானுவேல், ஆர்.சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க விஷால் சேகர் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வருகிறது.
அதையடுத்து தற்போது சண்டக்கோழி-2 படத்தை இயக்கி வரும் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜூன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறாராம். ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகரான அல்லு அர்ஜூனுக்கு தனது படத்திற்கு அவர் இசையமைக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக கனவாக இருந்து வருகிறதாம். அந்த கனவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் லிங்குசாமி இயக்கும் படத்தில் நனவாகப்போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அல்லுஅர்ஜூன்.