ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் மற்றும் பலர் நடித்து வியாழன்று வெளியான படம் 'துப்பறிவாளன்'. தொடர்ந்து தனித் தனியே சில தோல்விப் படங்களைக் கொடுத்த மிஷ்கின், விஷால் இருவருக்கும் 'துப்பறிவாளன்' படம் முக்கியமான படமாக கருதப்பட்டது. அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாகாமல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கரும் தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்னர் துப்பறிவாளன் படத்தை பார்த்த ஷங்கர் டுவிட்டரில் தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். அதில், "மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைலில் உருவாகியிருக்கும் துப்பறிவாளன் என்னை கவர்ந்துவிட்டது. விஷாலின் நடிப்பும், கதாபாத்திரமும் அருமை. படக்குழுவினர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்" என்று கூறியிருக்கிறார்.