‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்துள்ள படம் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது அனைவரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய குடும்ப படம் என்கிறார் அமீர்கான்.
இதுகுறித்து அமீர் மேலும் கூறியதாவது, குழந்தைகளை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் சிறுவர்களை மையப்படுத்தி ஒரு சில படங்கள் தான் வந்துள்ளன. டீன்ஏஜ் வயதுடையவர்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வர வேண்டும். குறிப்பாக 12 முதல் 18 வயதுடையவர்களுக்கான படங்கள் அதிகம் வர வேண்டும். இந்தப்படம் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய குடும்ப படமாக சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் இருக்கும் என்றார்.