ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீப காலத்தில் நடிகைகளிலேயே தனது திருமணம் குறித்த எதிர்பார்ப்பை நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் உலவ செய்தவர் அனேகமாக பிரியாமணி ஒருவராகத் தான் இருக்கும்.. ஒருவழியாக நேற்று முன் தினம் பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தாபா ராஜூவுக்கும் எளியமுறையில் பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. தொழிலதிபரான இவருக்கும் பிரியாமணிக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஐ.பி.எல் மேட்ச்சின்போது பழக்கம் ஏற்பட்டு நட்பாகி, அது காதாலாக மாறி இன்று திருமண வைபத்தை எட்டியுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று பெங்களூரூவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் பிரியாமணிக்கென பிரத்யேகமாக ஆடையை வடிவமைத்திருந்தார் மலையாள நடிகர் இந்திரஜித்தின் மனைவியான பூர்ணிமா. வரவேற்பில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பிரியாமணியின் நெருங்கிய தோழியான பாவனா உட்பட திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.